தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குங்பூ அரசியல்- சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாக்கி சான்! - சீன கம்யூனிஸ்ட் கட்சி

ஹாங்காங் நாட்டை பூர்விகமாக கொண்ட ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான், சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. அதை அவரே சூசகமாக வெளிப்படுத்தினார்.

Jackie Chan
Jackie Chan

By

Published : Jul 13, 2021, 12:24 PM IST

பெய்ஜிங் : சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஜாக்கி சானின் முடிவு விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

67 வயதான ஹாலிவுட் நடிகர் சாக்கி சான் தனது அரசியல் விருப்பம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் என்று சீனாவின் முன்னணி நாளேடான குளோபல் டைம்ஸ் திங்கள்கிழமை (ஜூலை 12) செய்தி வெளியிட்டுள்ளது.

சீனர் என்பதில் பெருமிதம்

அந்தச் செய்தியில், சிம்போசியம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் கலந்துகொண்டார். அப்போது சீனாவின் தேசிய தினம், திரைப்படங்கள் குறித்த தனது எண்ண ஓட்டத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், ஜாக்கி சான் பேசுகையில், “சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவரான நான் ஒரு சீனர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதும் ஆர்வம் கொண்டுள்ளேன்.

ஈர்க்கப்பட்டேன்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்துவத்தை என்னால் பார்க்க முடிகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக விரும்புகிறேன்.

சீன படையின் துணிச்சலால் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜப்பானுக்கு எதிராக 1931-45 போரில் நமது வீரர்கள் வீரதீரமுடன் போரிட்டனர். அவர்களின் துணிச்சல் என்னை தொட்டது.

சீனக் கொடிக்கு மதிப்பு

நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். சமீபத்திய ஆண்டுகளில் நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை என்னால் சொல்ல முடியும். நான் எங்கு சென்றாலும் சீனராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடி 'உலகம் முழுவதும் எங்கும் மதிக்கப்படுகிறது” என்றார்.

ஹாங்காங் தாய்வீடு- சீனா என் நாடு

ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகவே இருந்துவருகிறார். முன்னர் ஒருமுறை சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு ஒன்றுக்கு 2019இல் அளித்த பேட்டியில், “ஹாங்காங்கும் சீனாவும் எனது பிறப்பிடங்கள். சீனா எனது நாடு என்றால் ஹாங்காங் எனது வீடு. நான் எனது நாட்டையும், வீட்டையும் நேசிக்கிறேன். ஹாங்காங் விரைவில் அமைதிக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

சீனா- ஹாங்காங் இடையே சச்சரவு பல ஆண்டுகளாக தொடர்கிறது. சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக ஹாங்கில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

திட்டம்

இதை தேசிய பாதுகாப்பு சட்டம் வாயிலாக சீனா ஒடுக்கியது. இந்தச் சட்டத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

ஹாங்காங் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் ஹாங்காங்கின் வளர்ச்சிக்காக சில திட்டங்களை சீனா அமல்படுத்தவுள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதையும் படிங்க : பாதுகாப்பாக இருங்கள், நல்ல எதிர்காலம் உள்ளது- ஜாக்கி சான்

ABOUT THE AUTHOR

...view details