உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான ஜாக் மா, கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளார்.
தனது தொண்டு நிறுவனமான ஜாக் மா பவுண்டேஷன் நிதியிலிருந்து இந்த நலவுதவி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஜப்பான், கொரியா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நாடுகள் நோயை தடுப்பில் சிறப்பாகச் செயல்படும்விதமாக முகக்கவசம், நோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்க ஜாக் மா தொண்டு நிறுவனம் முடிவுசெய்துள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவுக்கு 10 லட்சம் முகக்கவசமும், 5 லட்சம் நோய் கண்டறியும் கருவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மா கடந்தாண்டு பொதுச்சேவையில் ஈடுபடும் நோக்கத்துடன் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.
இதையும் படிங்க:கொரோனாவை எதிர்க்க கோமியம் - ஹிந்து மகாசபாவின் புதிய திட்டம்!