இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சனிக்கிழமையன்று கரோனா தடுப்பூசியை நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் போட்டுக்கொண்டார். இதன்மூலம் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இன்று (டிச. 20) முதல் இஸ்ரேல் நாட்டின் சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, நாட்டின் முதல் நபராக கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இந்தத் தடுப்பூசியை தான் நம்புவதாகவும், இஸ்ரேல் நாடு அதன் இயல்பு நிலைக்கு திரும்பப்போவது தனக்கு உற்சாகமான தருணம் எனவும் தெரிவித்தார்.