கோலாலம்பூர்:மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாகோப் பிரதமராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான அறிவிப்பை மலேசிய மன்னர் அப்துல்லா, நேற்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டார்.
கடந்த திங்களன்று முகைதின் யாசின் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒத்துக்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட மலேசிய மன்னர், புதிய பிரதமரை தேர்வு செய்யும்வரையில், முகைதின் யாசின் இடைக்காலப் பிரதமராக இருப்பார் என அறிவித்தார்.