ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் நங்ஹர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதி சிறைச்சாலையில், இன்று ( ஆகஸ்ட் 3) ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சிறைச்சாலை மீது அவர்கள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திப் பின்னர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இதில் பாதுகாவலர்கள், பொது மக்கள், சிறைவாசிகள் என, 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் உள்ள சிறையில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு ஆப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தத் தாக்குதல் பின்னணியில் தலிபான்களுக்குத் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.