தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானிற்கு கைவிரித்த பிரான்ஸ் - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திகள்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும், இது இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னை எனவும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் யவ்ஸ் லூ ட்ரையன் கூறியுள்ளார்.

kashmir issue france urge india and pakistan

By

Published : Aug 21, 2019, 8:56 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை இந்தியா ரத்து செய்து காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமான எல்லை விவகாரங்கள் மீண்டும் தலைத்தூக்கியுள்ளன.

கடந்தவாரம் ஐநாசபையின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் பாக்கிஸ்தான் இதுகுறித்த விவாதத்தை சீனாவின் உதவியுடன் முன்வைத்தது. அந்த கூட்டத்தில் ஐநாசபையின் ஐந்து உறுப்பு நாடுகளில் சீனாவைத் தவிர்த்த நான்கு நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா பாகிஸ்தானிற்கு எதிரான நிலைப்பாட்டையே முன்வைத்தன.

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான தொலைபேசி உரையாடலிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதையடுத்து காஷ்மீரின் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்குமாறு ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடான பிரான்ஸிற்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் யவ்ஸ் லூ ட்ரையனுடனான தொலைபேசி உரையாடலில், காஷ்மீர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான இருதரப்பு பிரச்னை. இதனை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே சுமூக தீர்வு காண முடியும். மேலும், இந்தியா ஐநா சபையின் விதிகளை பின்பற்றியே காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே பதற்றங்களை அதிகரிக்காமல் தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானால் இன்றுவரை உறுப்பு நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் தவித்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details