தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் விரிவான அறிக்கை! - isis

கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதலின் போது

By

Published : Apr 24, 2019, 9:23 AM IST

இலங்கையில் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினத்தையொட்டி நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதே நாளில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன.

புனித அந்தோணியார் தேவாலயம்

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்ததன, இலங்கை அரசும் கடந்த இரு தினங்களாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு அந்நாட்டில் செயல்படும் வரும் என்.டி.ஜி எனப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புதான் காரணம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

வெடிகுண்டு தாக்குதலின் போது

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவ இண்டர்போல் ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் அறிவிப்பை வெளியிட்டது.

இது தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, " இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்காமல், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் " என்றார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச

இதற்கிடையே, கொழும்புவில், வெடிப்பொருட்கள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லாரி, வேன் ஆகிய இரண்டு வாகனங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, "நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தற்போது கூற முடியாது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும். அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம் " என தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக அறிவித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, இது தொடர்பான விரிவான செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் எந்தெந்த தேவாலயத்தில் தாக்குதல் நடத்தினர் என்பது விரிவாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த தாக்குதல் தொடர்பாக எவ்வித ஆதாரமும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்த தாமதமான பொறுப்பேற்பு, சர்வதேச நிபுணர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மிகுந்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு முன்னதாக நடத்திய தாக்குதலுக்கு சில மணி நேரத்தில் அல்லது ஒரிரு நாட்களில் பொறுப்பேற்று கொள்ளும். அதுவும், தாங்களின் கொள்கைகள், தாங்கள் நடத்திய தாக்குதல்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதிப்படுத்திய பிறகே பொறுப்பேற்று கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐஎஸ் விரிவான அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details