ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில், அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர் மோஹ்மந்தரா மாவட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்துவந்த மஹ்மூத் ஜான்.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதி படுகொலை! - ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதி படுகொலை
காபூல்: மோஹ்மந்தரா மாவட்டத்தில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐஎஸ் பயங்கரவாதி
அவர், அண்டை மாவட்டமான லால்போரின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். அதேபோல், ஜலாலாபாத்தில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு கான் குலாம் என்ற ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். பச்சீர் ஆகம் மாவட்டத்தில் ஐஎஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்ப்பதில் குலாம் முக்கிய பங்காற்றியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.