கடந்த ஜனவரி மாதம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. கரோனாவால் சீனாவில் மட்டும் சுமார் 2,800 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் பேர் நோய் பாதிப்பில் உள்ளனர்.
தற்போது கரோனாவின் தாக்கம் சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா, ஐரோப்பிய நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் இதுவரை 26 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 245 பேருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளது.
இந்நிலையில், பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் துணை அதிபர் 'மசோமே எப்டேகர்', கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அந்நாட்டினரிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சுகாதாரத்துறை இணை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில், துணை அதிபருக்கு இந்நோய் பரவியுள்ளது நோயின் தீவிரத்தன்மை உணர்த்துவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன என அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:நீங்கள் உண்மை தானா? 'இரட்டை உடல்' வதந்திக்கு புதின் விளக்கம்