தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சாபர் திட்டத்திலிருந்து இந்தியாவை விலக்கவில்லை - ஈரான் மறுப்பு - ஈரான் பொருளாதாரத் தடை

தெஹ்ரான்: சாபர் ரயில்வேத் திட்டத்திலிருந்து இந்தியாவை விலக்கியதாக வெளியானத் தகவல்களில் உண்மையில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

Iran
Iran

By

Published : Jul 16, 2020, 1:04 PM IST

ஈரானின் முக்கிய துறைமுகமான சாபர் துறைமுகத்தின் வளர்ச்சித் திட்டப்பணிகளில் இந்தியா முதலீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல்போக்கு நிலவிவருவதால், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை தொடர்ச்சியாக விதித்துவருகிறது.

இதன்காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானில் முதலீடு செய்வதில் சிக்கில் எழுந்துள்ளது. இந்நிலையில், சாபர் துறைமுக ரயில் திட்டப்பணிகளிலிருந்து இந்தியாவை ஈரான் நீக்கியுள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. முதலீடு செய்வதில் தாமதம்காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

இந்த செய்திக்கு ஈரான் தற்போது மறுப்புத் தெரிவித்துள்ளது. ஈரானின் சாபர் ரயில்வேத் திட்டத்தில் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இரு நாட்டு உறவிலும் பொருளாதாரத் தடை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

ரயில்வே திட்டத்தில் சீனா இணைந்துள்ள நிலையில், இந்தியாவும் எப்போதுவேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஹேக்கர்கள் கைவரிசை

ABOUT THE AUTHOR

...view details