பொதுவாகப் புலிகள் என்றாலே மக்களின் வாழ்விற்காக பல தியாகங்களை செய்பவை. அப்படி புரட்சி செய்யும் புலிகள் அழிக்கத்தான் படுகின்றன. அந்த வகையில் காட்டில் உயிர்சமநிலையை ஏற்படுத்தும் ஒரு உயிரியான புலியும் வெகுவாக அழிக்கப்பட்டு வந்தது.
இதனால் புலிவளம், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வேட்டைக்காக காத்திருக்கும் வேங்கை! காட்டின் ராஜா எனப்படும் சிங்கத்தைக் காட்டிலும், காட்டை உருவாக்குவதிலும் சரி, கைக்குள் வைத்துக் கொள்வதிலும் சரி புலிகளின் பங்கு அளப்பறியது. ஆம் புலிகள் உணவு சங்கிலியில் கூட முக்கிய புள்ளியாகவே உள்ளன. புலிகளின் எச்சங்களிலிருந்து பூஞ்சைகள் உருவாகி அதன்மூலம் பல்லுயிர்பெருக்கத்துக்கு வழிவகுக்கின்றன. இதனால் வனம் பெருகுகிறது. அதுமட்டுமின்றி காட்டில் உள்ள மற்ற உயிரினங்கள் பெருக்கத்தை தனது உணவு வேட்டையின் மூலம் கட்டுக்குள் வைக்கின்றன புலிகள். இதனால் காட்டில் வாழும் உயிரினங்களைக் காட்டிலும், மனிதனுக்கே அதிக நன்மை பயக்கிறது.
உலகில் உயிர் சமநிலை ஏற்படாமல் இருந்தால், எதாவது உயிரினம் பெருகும், அது மனிதனை அச்சுறுத்தும். அப்படி ஒரு நிலை ஏற்படாமலிருக்க புலிகள் அவசியமாகும். எனவே புலிகள் தினத்தை 'வெறும் தினமாக' கொண்டாடாமல் எப்போதும் புலிகளைக் கொண்டாடுவோம்.
அன்பெனும் வேள்வியில் நாங்கள்..! அழிந்துவரும் விலங்கினமாக அறிவிக்கப்பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை, கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2, 967 புலிகள் இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் 2,226 புலிகள் இருந்த நிலையில், அதன்பிறகு 741 புலிகள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.