பசிபிக் பெருங்கடல் பகுதியின் தீவு தேசமான இந்தோனேசியாவில் தீவிரமான இயற்கைப் பேரிடர்கள் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் சுமார் 1.3 லட்சம் பேர் உயிரிழந்தது உலகையே உலுக்கியது. எரிமலை பிரதேசமாக இந்தோனேசியா உள்ளதால் பூகோள ரீதியாகவே நிலநடுக்கம், சுனாமி அபாயம் கொண்ட பகுதியாக இப்பகுதி உள்ளது.
தற்போது அங்குள்ள மிராபி எரிமலை வெடிக்கத்தொடங்கியுள்ளதால் மீண்டும் நிலநடுக்க பீதி உருவாகியுள்ளது. சுமார் 3,000 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, நேற்று முதல் கரும்புகையை கக்தத் தொடங்கி அனல் சாம்பலை வெளியிட்டுவருகிறது. இதனால் வெளியேறும் வாயு சுமார் இரண்டு கி.மீ. உயரத்திற்கு சூழ்ந்து சுற்றுவட்டார கிராமங்களை அச்சுறுத்திவருகிறது.