இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி பகுதியில் திடீரென்று எதிர்பாராத வகையில் வானம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களாக அங்குள்ள காட்டுப் பகுதிகளில் கட்டுக்குள் அடங்காத வகையில் எரியும் காட்டுத்தீ தான் .இதனால் பெரும்பாலான வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருவதால் ஜாம்பி பகுதி முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. மேலும் மக்கள் சுவாசிக்க முடியாத வகையில் புகை மூட்டம் அதிகளவில் உள்ளது.
செக்க சிவந்த வானமாக மாறிய இந்தோனேசியா... குழப்பத்தில் மக்கள் - Indonesia sky change to red
இந்தோனேசியா: திடீரென்று வானம் முழு சிவப்பாக மாறிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த காட்சியை சமுகவலைதளத்தில் பதிவிட்ட நபர் கூறுகையில்,"இது இரவா பகலா என்று குழம்பாதீர்கள். இது பகல்தான். மேலும் இது செவ்வாய் கிரகம் அல்ல. அது ஏதோ வேற்றுக் கிரகமும் அல்ல. இது நமது பூமிதான். சுவாசிக்க முடியாமல் திணறுகிறோம். சுத்தமான காற்று இல்லை. புகைதான் உள்ளது. எங்களுக்குப் புகை வேண்டாம்" என தெரிவித்திருந்தார்.
இந்தோனேசியாவில் பற்றி ஏரியும் காட்டுத்தீ மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அமேசான் காட்டுத்தீ சம்பவம் உலகளவில் மக்களை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது