தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மவுண்ட் மெராபி எரிமலை வெடிப்பு; எச்சரிக்கை விடுத்த பேரிடர் குறைப்பு மையம்! - ஜாவா தீவு

மவுண்ட் மெராபி எரிமலை வெடிப்பின் அளவு உயர்ந்துள்ள நிலையில், அப்பகுதியில் சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு இந்தோனேஷிய அரசு தடை விதித்துள்ளது.

indonesia-raises-volcano-threat-level-sets-no-go-zone
indonesia-raises-volcano-threat-level-sets-no-go-zone

By

Published : Nov 6, 2020, 12:22 AM IST

ஜாவா தீவில் உள்ள மவுண்ட் மெராபி எரிமலைக்கு ஆபத்து அளவு அதிகமானதையடுத்து சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த இந்தோனேசிய அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் மெராபி எரிமலை கொந்தளிப்பு அதிகமானதையடுத்தை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எரிமலை கடந்த ஆண்டு வெடிக்கத் தொடங்கியதிலிருந்து, மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தது.

இதுகுறித்து தேசிய பேரிடர் குறைப்பு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ராதித்யா ஜாட்டி கூறுகையில், எரிமலையின் இந்த நிலை வெடிப்பை மேலும் அதிகப்படுத்தும் என்றார்.

இதனால் இந்தோனேஷிய அலுவலர்கள் மெராபி மலையேற்றத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர். இந்தப் பகுதியில் ஆய்வாளர்களுக்கும், பேரிடர் குறைப்பு நிறுவன அலுவலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு நடந்த எரிமலையின் வெடிப்பின் போது 347 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 20 ஆயிரம் கிராம மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல் யோக்யகர்த்தா எரிமலை மற்றும் புவியியல் ஆபத்து குறைப்பு மையம் தலைமை அலுவலர் ஹானிக் ஹுமைடா, மெராபி பகுதியிலிருந்து 5 கிமீ எல்லையில் இருப்பவர்கள் மாற்று இடங்களுக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அடுத்த அமெரிக்கா அதிபர் ஈரானிடம் சரணடைய வேண்டியிருக்கும்

ABOUT THE AUTHOR

...view details