ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அனைத்து தரப்பினரைவிடக் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. தற்போதைய குழந்தைகள் சாப்பிடும் போதும், ஸ்மார்ட்போனில் கேம்ஸ் அல்லது வீடியோ பார்த்தால் தான் சாப்பிடவே செய்கிறார்கள். இதைச் சரிசெய்ய இந்தோனேசியா அரசாங்கம் களம் இறங்கியது.
முதல் கட்டமாக, பண்டுங் பகுதியில் இயங்கும் தொடக்கப் பள்ளி , இளைய உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நான்கு வயதாகும் 2ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அவர்கள் காலை, மாலை இருவேளைகளும் குஞ்சுகளுக்குச் சாப்பாடு அளிக்க வேண்டும். வீட்டில் இடம் இல்லை என்றால், பள்ளி வளாகத்திலும் வைத்து வளர்த்துக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேயர் ஓடெட் முஹம்மது டேனியல் பங்கேற்ற விழாவில், மாணவர்களுக்குக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. அத்துடன் "தயவுசெய்து என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்ற வாசகமும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் மேம்படும் என அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ், "இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களின் அலைபேசி பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, கல்வியை விரிவுபடுத்துவதற்கான தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும் இருக்கும்" எனத் தெரிவித்தார். ஸ்மார்ட்போன்களை மறக்கடிக்க செய்ய இன்தோனேஷியாவின் புதிய முயற்சிக்கு பல்வேறு மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 8 ஜீன்ஸ் பேன்ட் ஒன்றுக்கு மேல் ஒன்று அணிந்து திருட முயன்ற பெண்!