கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் சூழலில் உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமுதாய மக்கள், இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஜோஸ் பிரான்சிஸ்கோ காலித்சே கவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் 'கோவிட்-19 தொற்றுநோயால் பூர்வீக சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் நான் அதிகமான அறிக்கைகளைப் பெற்று வருகிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களது நிலை எனக்கு கவலை அளிக்கிறது' என ஜோஸ் கூறியுள்ளார்.