தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் - இம்ரான் கான்

இஸ்லமாபாத்: இந்தியா தனது ஆணவப்போக்கின் காரணமாக அண்டைநாடுகளுடன் அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Imran
Imran

By

Published : May 28, 2020, 10:31 AM IST

கடந்த சில நாள்களாகவே இந்திய எல்லைப் பகுதி பெரும் சர்ச்சைக்குரிய அம்சமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதிகளில் உரிமை சிக்கல் தொடர்பாக இரு நாடுகளும் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவருகின்றன.

சீனா லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறலாக நுழைந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை குவித்துள்ளது. மேலும், நேபாளம் இந்தியாவுக்கு உட்பட்ட லிபுலேக் பகுதியை தனது பகுதியாக கூறி புதிய வரைபடத்தை வெளியிடப்போவதாகத் தெரிவித்துவருகிறது.

இந்த பூசல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் போக்கு அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியா தனது சிறுபாண்மை மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் பிரந்திய அமைதியை குலைக்கும் விதத்தில் செயல்பட்டுவருகிறது. இது மிகவும் ஆபத்தானது என்றார்.

இதையும் படிங்க:சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உணவு டெலிவரி செய்யும் ஜப்பான் விண்கலம்!

ABOUT THE AUTHOR

...view details