தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாள காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் உயிரிழப்பு - நேபாளத்திற்கு சுற்றுப் பயணம்

நேபாளத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கலைக்கும்பொருட்டு அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

Indian national killed in firing by Nepal Police: Pilibhit SP
Indian national killed in firing by Nepal Police: Pilibhit SP

By

Published : Mar 5, 2021, 2:54 PM IST

காத்மாண்டு: இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு மூன்று இளைஞர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் அவர்களுக்குள் சிறிது பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், நேபாள நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்களில் ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அருகில் உள்ள இந்திய-நேபாள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்த இந்திய காவலரிடம் இதுதொடர்பான தகவலை அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்தியா திரும்பிய இளைஞரை தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும், அதன்பிறகே உண்மைநிலை என்னவென்று தெரியவரும் என்றும் இந்திய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details