தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியருக்கு நெஞ்சுவலி்; அவசரமாக பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம்! - இந்தியருக்கு நெஞ்சுவலி

நடுவானில் இந்தியருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், இந்திய விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தானில் தரையிறங்கியது. இருப்பினும் 30 வயதான அந்த இளைஞரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

GoAir Karachi Emergency landing Indian man dies on board flight GoAir flight emergency landing Karachi GoAir Muhammad Noushad பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம் கோ ஏர் இந்தியருக்கு நெஞ்சுவலி நெஞ்சுவலி்
GoAir Karachi Emergency landing Indian man dies on board flight GoAir flight emergency landing Karachi GoAir Muhammad Noushad பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம் கோ ஏர் இந்தியருக்கு நெஞ்சுவலி நெஞ்சுவலி்

By

Published : Nov 18, 2020, 7:15 AM IST

டெல்லி: சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து டெல்லிக்கு கோ ஏர் விமானம்179 பயணிகளுடன் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் பயணித்த 30 வயதான இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அந்த இளைஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அறிந்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

எனினும் அவருக்கு மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதற்குள் நெஞ்சுவலியால் துடித்த இளைஞர் உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த அந்த இளைஞர் உத்தரப் பிரதேசம் பேரெய்லி பகுதியை சேர்ந்த முகம்மது நவ்ஷத் ஆவார்.

இதையும் படிங்க:மைசூர் செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிரங்கியது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details