அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினம், இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அவரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, இந்திய தூதரகம் மாஸ்கோவில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சியில், அண்ணல் காந்தி, லியோ டோல்சாய் ஆகியோர் இடையே இருந்த நல்லுறவை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மாக்கள் என்ற கருப்பொருளில் இந்த கண்காட்சி நடக்கிறது. இங்கு அண்ணல் காந்தியடிகள் குறித்த அரிதான பல புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.