தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மூன்றாவது விமானம்: காபூலிலிருந்து புறப்பட்ட 85 இந்தியர்கள் - இந்திய விமானப்படை

ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து மேலும் 85 இந்தியர்கள் விமானப்படை விமானம் மூலம் தாயகம் புறப்பட்டுள்ளனர்.

Indian Air Force
Indian Air Force

By

Published : Aug 21, 2021, 11:37 AM IST

காபூல்:தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டின் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். அதன்படி, ஒன்றிய அரசு ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம், காபூல் இந்திய தூதர தூதர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 129 பேர் நாடு திரும்பினர். அதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 21) சி -300 ராணுவ விமானம் 85 இந்தியர்களுடன் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

ஆப்கனின் பல்வேறு மாகாணங்களில் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "ஆப்கனில் உள்ள இந்தியர்களை அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம். டெல்லியிலிருந்து காபூலுக்கு தினமும் ராணுவ விமானங்களை இயக்குகிறோம். ஒவ்வொரு நாளும் 130 இந்தியர்களை நாடு அழைத்துவர திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:129 இந்தியர்களுடன் காபூலில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம்

ABOUT THE AUTHOR

...view details