தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குல்பூஷன் வழக்கை மீண்டும் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தியா! - பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: குல்பூஷன் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லும் முடிவில் இந்தியா இருப்பதாலேயே பாகிஸ்தானின் சலுகையை இந்தியா ஏற்கவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Kulbhushan Jadhav
Kulbhushan Jadhav

By

Published : Oct 25, 2020, 11:38 AM IST

இந்தியாவின் முன்னாள் கடற்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாகக் கூறி 2013ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அவரை கைது செய்தது. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துவரும் இந்தியா, குல்பூஷன் ஜாதவை ஈரானிலிருந்து பாகிஸ்தான் கடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த சர்வதேச நீதிமன்றம், அதை மறு பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு விழாவில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்ர ஷா மஹ்மூத் குரேஷி, "குல்பூஷனுக்கு சந்திக்க மீண்டும் தூதரக அனுமதியை வழங்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால், இந்தியா இதை ஏற்க மறுக்கிறது.

குல்பூஷன் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லும் முடிவில் இந்தியா இருக்கிறது. அதனாலேயே எங்கள் சலுகையை இந்தியா ஏற்கவில்லை.

எதிரி நாட்டின் அனைத்து தந்திரங்களையும் பாகிஸ்தான் புரிந்துகொள்கிறது. ஏற்கெனவே, இந்த விஷயத்தை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆனால், இந்தியா அதில் தோல்வியடைந்துவிட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும். அதுவரை இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை.

இந்தியாவில் இந்துத்துவா சித்தாந்தம் கொண்டு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் பிராந்திய அமைதி சீர்குலைகிறது" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களித்தார் அதிபர் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details