இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நீண்ட நாள்களாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிடியிலிருந்து பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கை காரணமாகத் தலிபான் பயங்கரவாத இயக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆட்சி அங்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளும் ஆப்கானின் முன்னேற்றத்திற்கு உதவிகளை மேற்கொண்டுவருகிறன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்தியா சார்பில் 11 லட்சம் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள சாபர் துறைமுகம் வழியாக இந்த உதவிகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.