தாய்லாந்தில் நடைபெறும் இரண்டு முக்கிய உச்சி மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டாவது நாளான இன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 16ஆவது இந்தியா-ஆசியன் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் Act East Policy (கிழக்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை)-யின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு (Association of South-East Asian Nations) விளங்குகிறது.