தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"பாக்., வான்வெளியில் நரேந்திரமோடி பறக்க தடை"- கொந்தளித்த பாக்., அரசு - prohibited to fly over Pakistan Air Space

இந்திய பிரதமர் நரேந்திர மோடி செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு, அந்நாட்டு அரசு அனுமதியளிக்க மறுத்துள்ளது.

modi flight prohibited

By

Published : Sep 18, 2019, 10:00 PM IST

இவ்வருடம் பலமுறை இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. எனினும் சில வான்வழித் தடங்களைப் பாகிஸ்தான் அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில் இம்மாதம் 21ஆம் தேதி, சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்லவுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளியாக விமானம் செல்லும் என்பதால், அந்த அரசிடம் இந்தியா அனுமதி கோரியிருந்தது.

இதற்குப் பாகிஸ்தான் அரசு அனுமதியளிக்க மறுத்துள்ளது. இது குறித்துப் பேசியிருக்கும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி, “பாகிஸ்தான் வான்வெளியில் இந்தியப் பிரதமர் செல்லும் விமானம் பறக்கக் கோரப்பட்ட அனுமதியை, பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மீதுள்ள இந்திய அரசின் அணுகுமுறை தான் இதற்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

இதற்குக் கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளி விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “விவிஐபி சிறப்பு விமானத்திற்கான பயணத்திற்கு இரண்டு வாரங்களில், இரு முறை பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டது. இருமுறையும் அனுமதியளிக்கப் பாகிஸ்தான் அரசு மறுத்தது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத நடைமுறையைப் பாகிஸ்தான் கையாள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானம் பறக்க தடை?

ABOUT THE AUTHOR

...view details