தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அணு ஆயுத போர் மூளும் அபாயம் - இம்ரான் கான் - இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பாகிஸ்தானை தொடர்புப் படுத்தி இந்தியா ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்தினால், அது இரு அணு ஆயுத நாடுகள் மத்தியில் போரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

By

Published : Aug 23, 2019, 4:25 PM IST

பாகிஸ்தான் நாட்டில் தீவரவாத அமைப்புகளை அழிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்திவரும் சூழலில், இனி இந்தியாவுடனான எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ’தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் அளித்த பேட்டியில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ”காஷ்மீரில் இந்தியா ஏதேனும் அசம்பாவிதத்தை எற்படுத்தக்கூடும். இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உள்ளது. மேலும் அணு ஆயுத நாடுகளான இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொண்டால் அது இரு நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details