தமிழ்நாடு

tamil nadu

உலக மக்கள் தொகை: விரைவில் சீனாவை முந்தும் இந்தியா -  ஆய்வில் தகவல்!

2027ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என சீனாவின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

By

Published : May 13, 2021, 7:39 AM IST

Published : May 13, 2021, 7:39 AM IST

populous country
populous country

உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்து சீன நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 'உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, வரும் 2027ஆம் ஆண்டிலேயே உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை புள்ளி விவரத்தின்படி இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள்தொகை 143 கோடியாக இருந்த நிலையில், 2027க்குள் இந்தியா சீனாவை முந்திவிடும் என ஆய்வின் கணிப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து அங்கு வேலையாட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சீனாவில் முதியோரின் எண்ணிக்கை வரும் சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மகப்பேறு தொடர்பான கட்டுப்பாடுகளை சீனா விரைவில் நீக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'பெருந்தொற்று சமயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணையாக இருக்கும்!’

ABOUT THE AUTHOR

...view details