பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத், கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இணையத்தில் அவர் பதிவேற்றியிருக்கும் காணொலியில், "இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களைப் புறக்கணிக்க ஐ.சி.சி.யை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் சார்பாக நான் பேசுகிறேன், இந்தியாவுடன் அனைத்து விளையாட்டு உறவுகளும் இடைநிறுத்தப்பட வேண்டும். எல்லா நாடுகளும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.