வங்கதேச நாட்டின் பிதாமாகனாகக் கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வங்கதேசத்தில் நேற்று கொண்டாப்பட்டது. இந்த விழாவில் நேரில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக இந்த விழாவில் மோடி நேரடியாகக் கலந்துகொள்ளாத நிலையில், காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
விழாவில் இந்திய - வங்கதேச உறவு குறித்து பெருமிதமாகப் பேசிய மோடி, உலகில் பயங்கரவாதம், வன்முறையை கையிலெடுத்த நாடுகள் தற்போது பின்தங்கியுள்ள நிலையில், வளர்ச்சியைக் கையிலெடுத்த வங்கதேசம் புதிய உச்சங்களைத் தொட்டுவருகிறது என்றார்.