வட கொரியா நாடு கடந்த வாரம் நீர்மூழ்கியிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணையை (slbm - Submarine launched ballistic missile) சோதனை செய்தது. இதற்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஜெர்மனி இந்த விவாதத்தில் ஈடுபட்டது.
இது தொடர்பாக வட கொரியாவின் தூதர் கிம் சாங் தெரிவித்ததாவது, "அமெரிக்காவின் தூண்டுதலில் தான் எங்கள் நாட்டில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை குறித்து ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் விவாதிக்க முற்பட்டுள்ளது. இனி இதுகுறித்து கேள்வியெழுப்பினால் நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ள எதை வேண்டும் என்றாலும் செய்வோம்" என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் கூறியுள்ளார்.