பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா பகுதி சோதனைச் சாவடி அருகே, அந்நாட்டு காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. அதில் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர்.
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 9 பேர் சாவு - suicide bomb attack
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்
அப்போது, பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு வந்த பெண் ஒருவர் வெடித்ததில், சம்பவ இடத்தில் ஆறு காவலர்கள், பொதுமக்களில் மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.