இதுகுறித்து அவர், பாகிஸ்தான் நாட்டின் அனைத்து குடிமக்களும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும். பல சட்ட ரீதியான சிக்கல்களால் பாகிஸ்தானில் முடக்க நடவடிக்கை சாத்தியமில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் பொறுப்பு, போர்கால அடிப்படையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும், அதனால் பற்றாக்குறை இருக்காது எனத் தெரிவித்தார்.
"கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 தாண்டியது" - இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானில் அனைத்து வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடுமிடங்கள் மூடப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கரோனா வைரஸால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸினால் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள ஈரானை அண்டை நாடாகப் பாகிஸ்தான் கொண்டுள்ளதால், வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது என்றார்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்புக்கு பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை கைவிரித்த இம்ரான் கான்