பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மூன்றாவது மனைவி புஸ்ரா பிபி. 2018இல் இம்ரானுடன் மணம் முடித்துக்கொண்ட பிபி, வெளியுலகிற்கு வரும்போது புர்கா அணித்துகொண்டேதான் வருவார்.
"உண்மையில் பிபி யார் ?" என்ற கேள்வி அனைத்து பாகிஸ்தானியர்களின் மனதிலும் உள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் புஸ்ரா பிபி தான்.
இவ்வாறாக பல்வேறு மர்மங்களைத் தன்னகத்தே கொண்ட புஸ்ரா பிபி குறித்த விநோதத் தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் வீட்டுப் பணியாட்கள், புஸ்ரா பிபியின் உருவம் கண்ணாடியில் தெரிவதில்லை என்று கூறுகின்றனர். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தன் மனைவி பிபியுடன் சவுதிக்குச் சென்று மக்காவில் உம்ரா மேற்கொண்டார். அப்போது, பிபி முழுநீள புர்கா அணிந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க:
இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்!