தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்விட்டர் வாசிகளிடம் வசமாக சிக்கிய இம்ரான் கான்! - நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: ட்விட்டரில் தன்னை பின்தொடருபவர்கள் அனைவரையும் நீக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முதல் மனைவியையும் நீக்கி ட்விட்டர் வாசிகளிடம் சிக்கிக்கொண்டார்.

ட்விட்டர்
ட்விட்டர்

By

Published : Dec 8, 2020, 1:48 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் தன்னை ட்விட்டர் கணக்கில் பின்தொடருபவர்கள் அனைவரையும் நீக்கினார். அப்போது, முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தையும் சேர்த்து நீக்கியது பெரும் பேசும்பொருளாக தற்போது சமூக வலைதளங்களில் மாறியுள்ளது.

2010இல் தனது ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய இம்ரான் கான், முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை பிரிந்து இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிறகும் பின்தொடர்ந்துவந்தார். ஆனால், தற்போது நீக்கியுள்ளதற்கு மாறுபட்ட கருத்துகளை ட்விட்டர் வாசிகள் பகிர்ந்துவருகின்றனர்.

பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் கணக்கு

இது தொடர்பாக ட்விட்டர் வாசி ஒருவர் வெளியிட்ட பதிவில், "பிரதமர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீஃப்பின் ட்விட்டர் கணக்கைப் பார்வையிட்டுள்ளார். அப்போது, நவாஸ் யாரையும் பின்தொடராததை அறிந்த கான், உடனடியாக தனது கணக்கிலிருந்து அனைவரையும் நீக்கிவிட்டார்" எனப் பதிவிட்டிருந்தார். பலரும் வித்தியாசமான கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details