பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்னும் சில நாள்களில் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பு பேரில் இம்ரான் கான் இந்த பயணம் மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது இரு நாடுகளும் பல்வேறு திட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய துணைக் கண்ட பூகோள அரசியலிலும் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தனது அண்டை நாடான உக்ரைனை படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொள்வது கவனம் பெற்றுள்ளது. மேலும், அன்மையில் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பயணத்தின்போது இந்தியாவை சீண்டும் விதமாக காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா கருத்து தெரிவித்து. சீனாவைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடான ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் இம்ரான் கான்.
இதையும் படிங்க:#BoycottHyundai: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹுண்டாய் கருத்து - இந்தியர்கள் கடும் எதிர்ப்பு