கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று (ஆக. 7) விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்கும்போது ஓடுதளப்பாதையில் வழுக்கி, அதிலிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் இரு விமானிகள், ஐந்து ஊழியர்கள், 10 குழந்தைகள், 174 பயணிகள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
கோழிக்கோடு விமான விபத்து : பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
இஸ்லாமாபாத் : கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவ்விமான விபத்து குறித்து பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "கேரள மாநிலத்தில் நிடைபெற்ற விமான விபத்தில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இச்செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். இம்மாதிரியான இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அல்லாஹ் துணை நிற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோழிக்கோடு விமான விபத்து: தகவல்கள் உடனுக்குடன்