உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினம்தோறும் 5 லட்சத்தை தாண்டுகிறது. இந்நிலையில், இந்திய விஞ்ஞானிகள் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் கீழ் அங்கு பணியாற்றி வந்தனர். ஆனால், அவர்களில் சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகம், விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால், மத்திய அரசு, இந்திய விமானப்படையின் உதவியை இந்திய தூதரகம் நாடியது.
கரோனா பாதிப்புக்குள்ளான விஞ்ஞானிகளை மீட்டு வந்த விமானப்படை! - கரோனா பாதிப்புக்குளான விஞ்ஞானிகளை மீட்டு வந்த விமானப்படை
டெல்லி: மத்திய ஆசிய நாட்டிலிருந்து கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உள்பட 50 விஞ்ஞானிகள், இந்திய விமானப்படையின் சிறப்பு சி -17 குளோப்மாஸ்டர் விமானத்தில் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து, மத்திய ஆசிய நாட்டிற்கு விமானப்படையின் சிறப்பு சி -17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் விரைந்தது. அங்கு கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான விஞ்ஞானிகள் உள்பட 50 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணி சுமார் 20 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், விமானத்தில் வந்த விஞ்ஞானிகளின் தகவலை தர விமானப்படை மறுத்துவிட்டது.
இதே போல், சீனா உள்பட பல நாடுகளில் சிக்கிய முக்கிய நபர்களை இந்திய விமானப்படையினர் மீட்டு வந்துள்ளனர். விமானத்தில் பயணித்த குழுவினர் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே போல், இந்திய கடற்படையின் கப்பல்கள், கரோனா காலக்கட்டத்தில் ஈரான், மாலத்தீவு, இலங்கை மற்றும் பல நாடுகளில் சிக்கியவர்களை மீட்க அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.