தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வூகான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - ஊரடங்கு உத்தரவு

ஹூபே: கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வூகான் தலைநகரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை சீன அரசு தளர்த்தியுள்ளது.

Hubei - wuhan restrictions lifted
Hubei - wuhan restrictions lifted

By

Published : Mar 30, 2020, 11:08 AM IST

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் ஹூபே மாகணத்தின் தலைநகரான வூகானில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது.

இந்தத் தொற்று சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பிலிருந்து சீனா மீண்டுவருவதையடுத்து, வூகான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அப்பகுதியில் மீண்டும் மக்கள் நடமாடவும், உள்ளூர் ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது சீனாவின் பிற பகுதிகளிலிருந்து வூகானிற்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அரசின் மறு உத்தரவு வரும்வரையில் அப்பகுதியிலிருந்து வெளியேற முடியாது என சீன அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'வூகான் வைரஸ்' கருத்து: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details