பிரிட்டிஷ் நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து பெற்ற பிராந்தியமாக ஹாங்காங் விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்போராட்டங்களை எந்த ஒரு அமைப்பும் தலைமை வகிக்காமல் இளைஞர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வழிநடத்தி வருகின்றனர்.
சட்டத் திருத்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும், காவல்துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் பல சமயங்களில் வன்முறையில் முடிகிறது.