ஹாங்காங் நாடு 1997ஆம் ஆண்டு சீனாவின் ஒரு பகுதியாக இணைந்தது. அதற்கு முன்னர் அது பிரிஷ்டிசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது. சீனா மற்றும் ஹாங்காங் நிர்வாகம் இடையேயான ஒப்பந்தம் 50 ஆண்டுகால நடைமுறை கொண்டது. கம்யூனிச நாடான சீனாவில் கருத்து மற்றும் பத்திரிகை சுதந்திரம் கிடையாது.
ஆனால் ஹாங்காங்கில் மட்டும் உண்டு. இதனால் ஹாங்காங் மீது சிறப்பு கவனத்தை சீனா செலுத்த ஆரம்பித்தது. விளைவு, கருத்து மற்றும் பத்திரிகை உள்பட சில சுதந்திரங்கள் கேள்விக்குறி ஆகின.
இதையடுத்து ஹாங்காங் மக்கள், சீனாவுக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா-ஹாங்காங் ஒப்பந்தம் 2047ஆம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது. ஆனால் அதற்குள் சீனாவிடம் இருந்து வெளியேறி விட வேண்டும் என ஹாங்காங் மக்கள் விரும்புகின்றனர்.