தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2020, 12:22 AM IST

ETV Bharat / international

'கண்ணீர் வரும்... எரிச்சல் உண்டாகும்..' புதிய ஐஸ்கிரீம் பிளேவர் சாப்பிடும் ஹாங்காங் வாசிகள்!

ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கண்ணீர்புகை' (Tear Gas) என்ற புதிய ஐஸ்கிரீம் பிளேவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்

ஹாங்காங்கில் உள்ள ஐஸ்கிரீம் கடை ஒன்றில் 'கண்ணீர் புகை' என்ற புதிய ஐஸ்கிரீம் பிளேவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். மக்கள் பலரும் ஆர்வமாக இந்த ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர். இந்த டியர் கேஸ்' பிளேவர் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான கருப்பு மிளகுத்தூள் (Black peppercorns), கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல் துறையினர் உபயோகித்த கண்ணீர் புகையில் வந்த கடுமையான மிளகுத்தூள் வாசனையை நினைவு படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஸ்கிரீம் சாப்பிடும் நபர் கூறுகையில், "இந்தப் பிளேவரில் டியர் கேஸ் வாசனை அப்படியே உள்ளது. டியர் கேஸை சுவாசிப்பது கடினம். உடனடியாக நிறைய தண்ணீர் குடிக்க வைக்கும். இதைச் சாப்பிடும் போது நான் ஆர்ப்பாட்டத்தில் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வருகிறது" என வேதனையுடன் தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் கூறுகையில், "இதை சாப்பிடுவதன் மூலம் மக்கள் போராடும் எண்ணத்தை ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள். டியர் கேஸ் சுவையை கொண்டு வருவதற்காக வசாபி (wasabi) , கடுகு (mustard) உள்ளிட்ட பல்வேறு பொருள்களை முயற்சித்தோம். ஆனால், கருப்பு மிளகை கலந்து போது டியர் கேஸ் வாசனையை நெருங்கி வந்தது எனத் தெரிவித்தார்.

புதிய ஐஸ்கிரீம் பிளேவர் சாப்பிடும் ஹாங்காங் வாசிகள்

'கண்ணீர்புகை ஐஸ்கிரீம், 5 டாலருக்கு விற்பனை செய்து வந்ததால் மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். கரோனா வருவதற்கு முன்னர் தினந்தோறும் 20 முதல் 30 ஸ்கூப் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உணவு வழங்காததால் போலீஸார் மீது கற்கள் வீசிய புலம்பெயர் தொழிலாளர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details