தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன நாடாளுமன்றத்தில் தாக்கலான ஹாங்காங் பாதுகாப்பு மசோதா!

பெய்ஜிங்: சீன அரசு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாங்காங்
ஹாங்காங்

By

Published : May 22, 2020, 4:31 PM IST

ஹாங்காங்கில் அரசின் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டம் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முன்னதாக, கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, விசாரிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராடியதால், அச்சட்டத் திருத்தம் கைவிடப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு அபாயகரமான பகுதியாக உள்ள ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தனிநபர் சுதந்திரம் பறிபோகும் சூழ்நிலை உருவாகும் என அமெரிக்கா, ஹாங்காங் ஜனநாயக சார்பு நபர்களால் அடிக்கடி கண்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சிலர் இத்திட்டம் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வண்ணப் புரட்சியை (colour revolution) உருவாக்கி முழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆப்கன் அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details