ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும், கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தியும் ஹாங்காங் அரசை எதிர்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் போராட்டத்தில் தீர்வு காண முயலும் ஐ.நா...! - Hong Kong protests
ஹாங்காங் போராட்டத்தில் ஐ.நா. தலையிட முடிவு செய்துள்ளது.
இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காவல்துறையினர் காயமடைந்தும், ஏராளமான பொதுச்சொத்துகள் சேதமடைந்தும் வருகிறது. மேலும் இந்த போராட்டத்தால் ஹாங்காங் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஐ.நா தலையிட முடிவு செய்துள்ளது. ஹாங்காங் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பெப்பர் ஸ்ப்ரே போன்ற மனிதத்தன்மையில்லாத தாக்குதல் நடத்தப்படுவதால் ஐ.நா. தலையிட முடிவு செய்துள்ளது. இதில் போராட்டக்காரர்களும், அரசும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்த ஐ.நா தீர்மானித்துள்ளது.