தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹாங்காங் போராட்டம்: பண்டிகை தினத்திலும் வெடித்த போராட்டம்! - Christmas sees no halt in clashes

ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையிலும் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர்.

Hong Kong protests, Christmas sees no halt in clashes
Hong Kong protests

By

Published : Dec 26, 2019, 8:30 AM IST

ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஜனநாயக ஆதரவாளா்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் கூடிய போராட்டக்காரா்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதன் மூலம், பண்டிகை உற்சாகத்தை அவா்கள் குலைத்துவிட்டதாக சீன ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டக்காரா்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் மிளகாய்ப் பொடி தூவியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

தீவிரமடையும் ஹாங்காங் போராட்டம் - பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த போலீஸ்!

இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் நடக்கும் மாங்காக் பகுதியில் போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக, ஏராளமான கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களை நோக்கி காவல் துறையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர்.

ஹாங்காங் போராட்டம்: அரசியல்வாதி காதைக் கடித்து துப்பிய போராட்டக்காரர்!

இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும், தலைமை நிர்வாகி மக்களால் நேரடியாகத் தோர்ந்தெடுக்கப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீது அளவுக்கதிக பலப் பிரயோகம் செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் தொடா்ந்து போராடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details