சீன அரசு ஏப்ரல் 3ஆம் தேதி குற்றவாளிகளை விசாரணைக்காக ஹாங்காங்கிலிருந்து நாடு கடத்த வழிவகை செய்ய புதிய மசோதாவைத் தாக்கல் செய்தது. ஹாங்காங் மக்கள் இந்த மசோதாவை எதிர்த்துக் கடும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அதில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பின் சீன அரசு அந்த மசோதாவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.