பிரிட்டிஷ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து பெற்ற பிராந்தியமாக விளங்கிவருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் கடந்த மூன்று மாதங்களாக வார இறுதி நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
முடிவுக்குவந்தது ஹாங்காங் போராட்டம்; விமான நிலையம் மீண்டும் திறப்பு
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம், "ஹாங்காங் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தளத்தை அரசு விரைவில் அமைக்கவுள்ளது.
இதனைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கையாள நினைக்கிறேன். மக்களின் கருத்துக்களைக் கேட்க தாயாராக உள்ளேன்.
மேலும், போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான சட்டத்திருத்த மசோதா மீட்டெடுக்கப்பட மாட்டாது" என்றார்.