ஹாங்காங்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க சீனாவுக்கு அனுப்பும் மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வன்முறையாக வெடித்த ஹாங்காங் போராட்டம்: அரசு அலுவலகங்கள் மூடல்!
ஹாங்காங் போராட்டத்தின் எதிரொலியாக இன்று பல பகுதிகளில் உள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதில் நேற்று போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருந்தும் போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்தும், குடையைப் பிடித்தும் அரசு தலைமை அலுவலகங்களை நோக்கி முன்னேறிச் சென்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் எதிரொலியாக இன்று பல பகுதிகளில் உள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.