தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹாங்காங்கில் 4ஆம் கட்ட கரோனா அலை... நிபுணர்கள் எச்சரிக்கை! - ஹாங்காங் கொரோனா பாதிப்பு

ஹாங்காங்: நான்காம் கட்ட கரோனா அலை நகரத்தில் தொடங்கியுள்ளாதாகவும், அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் ஹாங்காங்கின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ong
ong

By

Published : Nov 20, 2020, 6:45 PM IST

ஹாங்காங்கில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று பல்வேறு மாகாணங்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 4ஆம் கட்ட கரோனா அலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, "முதல், இரண்டு அலைகள் ஜனவரி பிற்பகுதியிலிருந்து ஜூன் வரையிலும் இருந்தது. மூன்றாவது அலை ஜூலை மாதத்திலும் தாக்கியது. பின்னர், செப்டம்பரில் கரோனா பாதிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் குளிர்காலத்தில் அடுத்தக்கட்ட கரோனா அலை தாக்கி வருகிறது தொடர்ச்சியாகி வருகிறது

இதுகுறித்து சீன பல்கலைக்கழக சுவாச மருத்துவ நிபுணரும், COVID-19 இன் அரசாங்க ஆலோசகருமான பேராசிரியர் டேவிட் ஹுய் ஷு-சியோங் கூறுகையில், " தற்போது ஏற்படும் கரோனா தொற்று பாதிப்பு எப்படி வருகிறதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே, நகரத்தில் நான்காம் கட்ட கரோனா அலை வந்துவிட்டதாக நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

ஹாங்காங் அரசாங்கம், பாதுகாப்பு இடைவெளி போன்ற விதிகளை விரிவாக மறுஆய்வு செய்துவருவதாகவும், திங்கள்கிழமையிலிருந்தே அங்கு கரோன தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என மருத்துவத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். இதுவரை ஹாங்காங்கில் கரோனா தொற்றால் 5,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details