ஹாங்காங் சட்டப்பேரவையில் சீன தேசிய கீத மசோதா கடந்த 4ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு சட்டப் பேரவையில் 41 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த மசோதா ஜூன் 11ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது.
சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், 6,450 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். சீனாவின் தேசிய கீதத்தை இசைக்க, ஹாங்காங் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.