சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் புதிய சட்டம் அண்மையில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஹாங்காங் வீதிகளில் தனது இரு சக்கர வாகனத்தில் உலா வந்த அவர், தனது வண்டியில் கறுப்பு நிறக் கொடி ஒன்றை வைத்திருந்தார்.
அதில் 'ஹாங்காங்கை விடுதலை செய், இது எங்கள் காலத்தின் புரட்சி' என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
தெருவில் திரிந்த நபரை மடக்கிப் பிடித்த ஹாங்காங் காவலர்கள் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் நோக்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை சீனா தற்போது நிறைவேற்றியுள்ளது. ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கத் தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தைச் சீன அரசுக்குத் தருகிறது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!